Important Links

More Search Keywords

See it!

Wednesday, December 17, 2008

கைமாறியது எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

Enthiran! - Now Sun Picture Production
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படைப்பான எந்திரன்- தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது சன் டிவியின் சன் பிக்சர்ஸ்.

இது தொடர்பாக இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில்ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சந்திக்கின்றனர்.

எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் ரூ. 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பியது


இந் நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதிபூண்டுள்ளது.

சன் நிறுவனம் சமீபத்தில் தான் சன் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்படப் பிரிவைத் துவங்கியது. இந்த நிறுவனத்தின் முதல் படம் காதலில் விழுந்தேன் பிரமாண்ட வெற்றி பெற்றது. அடுத்த படம் தெனாவட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

விரைவில் சிவா மனசுல சக்தி, தீ, பூக்கடை ரவி போன்ற படங்கள் வெளி வர உள்ளன.

No comments:

Labels